top of page
என் தனிமையின் சப்தங்கள்
கவிதை

என் தனிமையின் சபதங்கள்
பகல் பொழுதுகளில்
ஐந்து புள்ளிச்சில்லைகளின்
கெச்சட்டங்களாலானவை
இரவுகளிலோ
இணைதேடிப் புணரத்
தனித்தலையுமொரு
பூனையின் ஆங்காரமாய்
எதிரொலிக்கின்றன
எனைச் சூழ்ந்த
என் மௌனங்கள்
என் குரலோசையை
மறக்கச் செய்துவிட்டன
நினைவிலாடும் சித்திரங்கள்
சன்னவோலியில் இசைக்கும் கீதங்கள்
முகாரியிலமைந்திருப்பதில்
வியப்பென்று ஏதுமில்லைதான்.
bottom of page