குறுங்கதைகள்

கொஞ்ச நாளாகவே அவன் பெயரைக் கேட்டாலே எனக்கு எரிச்சல் எரிச்சலாக வருகிறது. இத்தனைக்கும் அவனோடு எனக்கு எந்தப் பிணக்கும் இல்லை. தினசரி அவனை நான் பார்ப்பது கூடக் கிடையாது. அவன் இருப்பது வேறொரு திசை என்றால் நான் இருப்பது அதற்கு நேரெதிர் திசை. ஆயினும் அவன் பெயரை யாராவது ஏதாவதொரு சந்தர்ப்பத்தில் என்னிடம் சொல்லவோ அல்லது அவன் பெயர் என் கண்ணில் பட்டுவிடும்படியோ செய்துவிடுகிறார்கள்.
சில சமயங்களில் இப்படித்தான் எதனோடாவது அல்லது யாருடனாவது ஒரு விரோதம் வந்துவிடுகிறது.

இந்த ஊரில் அடிக்கிற அல்லது அடிக்கப்போகிற குளிருக்கு ஸ்வெட்டரெல்லாம் தேவைப்படாதென்பது தெரியாமலா பின்னிக் கொண்டிருக்கிறாள். ஸ்வெட்டரின் தேவையை விட அதைப் பின்னுதலின் தேவை அவளுக்கு அதிகமாய் இருப்பதைப் போல இருந்தது அவள் பின்னிக் கொண்டிருப்பது. அவள் மனதுக்குள் நடக்கிற அத்தனைப் போராட்டங்களையும் இப்படி உல்லனைப் பின்னி பின்னி மறந்து கொண்டிருக்கிறாளோ என்று தோன்றியது.

என்னம்மா.. திரும்பவும் அப்பாவுக்கு மயக்கம் வந்திருச்சா.. மிஸ்டர் அறிவுநாயகம்.. ஒழுங்கா நேரா நேரத்துக்கு மாத்திரைகளையெல்லாம் சாப்பிடுறீங்களா இல்லையா.. வாக்கிங் போகச் சொன்னேனே போறீங்களா.. என்னது அதுவும் ரெகுலாரா இல்லையா.. என்னம்மா இது இப்படி இருக்கார். சார்.. நீங்க தினசரி வாக்கிங் போகனும். அப்படி வாக்கிங் போறப்ப நேக்கடா போங்க..
நான் அதிர்ச்சியில் "டாக்டர் ..." என்று சத்தமாக கத்த.. அருகிலிருந்த மகள்..
"யப்பா.. நீ வேற.. டாக்டர் சொல்றது கேட்ஜெட்ஸ் எதிவுமில்லாம.. போனில்லாம.. கையில ஸ்மார்ட் வாட்சில்லாம.. காதில இயர்பட்ஸ் இல்லாம.."

ஆமாம். உன்னிடம் தான் சொன்னேன். கண்மூடி நினைவிழந்து போய் அவனிருக்கும் அந்த திரும்பவே முடியாத திரிசங்கை நீ இரவலாய்க்கூட கேட்க நினைக்காதே. அது விடுதலையல்ல. சிறை.
அதோ எரிந்து கொண்டிருக்கிறானே, அவனும் விடுதலையை விரும்பித் தான் விசமருந்திச் செத்துப் போனான். அவனுக்கு அவன் மனைவி மீது கொள்ளைப் பிரியம். அந்த பிரியமே அவளைச் சந்தேகிக்க வைத்தது. இப்போது யாருக்கு விடுதலை கிடைத்தது நீ சொல் பாரக்கலாம்.
என்று கூறி நிறுத்தியவர் இடுப்பளவு தண்ணீரில் இறங்கி நின்றார்.

வாட் ஈஸ் திஸ் நான்ஸெனஸ். இதற்குத் தான் நான் யாருடனும் நடப்பதே இல்லை. என் தனித்த இரவின் சுகத்தைப் பறிப்பதற்காகவே இது என்னுடன் உரையாட நினைக்கிறதா என்ற எண்ணம் எழுந்து முந்தைய ஆச்சர்யம் காணாமற் போய் ஒருவித எரிச்சல் உண்டாகத் தொடங்கியிருந்தது.
அதையும் தாண்டி அந்த அல்கோ என்னையும் ஒரு அல்கோ என்றே எண்ணித் தான் தன் உரையாடலைத் தொடர்கிறது என்ற விசயமும் மெல்ல எனக்குப் புரிபட ஆரம்பித்தது.